தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 6,185 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 83,411 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,528 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,154ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 145,586 ஆக அதிகரித்துள்ளது. 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,921 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று (செப்.10) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
அரியலூர் - 33
செங்கல்பட்டு - 279
சென்னை -991
கோவை - 440
கடலூர் - 263
தர்மபுரி - 124
திண்டுக்கல் - 87
ஈரோடு -32
கள்ளக்குறிச்சி - 113
காஞ்சிபுரம் - 173
கன்னியாகுமரி - 75
கரூர் - 62
கிருஷ்ணகிரி - 123
மதுரை - 61
நாகை - 130
நாமக்கல் - 123
நீலகிரி 69
பெரம்பலூர் -29
புதுக்கோட்டை - 99
ராமநாதபுரம் - 53
ராணிப்பேட்டை - 118
சேலம் - 300
சிவகங்கை - 20
தென்காசி - 64
தஞ்சை - 90
தேனி - 95
திருப்பத்தூர் - 85
திருவள்ளூர் -296
திருவண்ணாமலை - 81
திருவாரூர் - 127
தூத்துக்குடி - 112
திருநெல்வேலி - 123
திருப்பூர் - 155
திருச்சி - 130
வேலூர் - 152
விழுப்புரம் - 189
விருதுநகர் - 31