This Article is From Sep 15, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.14) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.14) கொரோனா பாதிப்பு நிலவரத்தை இங்குக் காணலாம்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.14) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 53 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 78,190  பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,434 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,799 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,53,165 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 46,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,49,583 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 10,436 பேர சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 940 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்று (செப்.14) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 16

செங்கல்பட்டு - 364

சென்னை - 991

கோவை - 498

கடலூர் - 296

தர்மபுரி - 87

திண்டுக்கல் - 76

ஈரோடு -133

கள்ளக்குறிச்சி - 139

காஞ்சிபுரம் - 167

கன்னியாகுமரி - 134

கரூர் - 57

கிருஷ்ணகிரி - 78

மதுரை - 95

நாகை - 120

நாமக்கல் - 118

நீலகிரி - 94

பெரம்பலூர் -10

புதுக்கோட்டை - 95

ராமநாதபுரம் - 25

ராணிப்பேட்டை - 99

சேலம் - 297

சிவகங்கை - 39

தென்காசி - 80

தஞ்சை - 125

தேனி - 55

திருப்பத்தூர் - 82

திருவள்ளூர் -294

திருவண்ணாமலை - 222

திருவாரூர் - 143

தூத்துக்குடி - 73

திருநெல்வேலி - 72

திருப்பூர் - 192

 திருச்சி - 74

வேலூர் - 139

விழுப்புரம் - 125

விருதுநகர் - 42

.