This Article is From Sep 21, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.20) கொரோனா நிலவரம்!

இதுவரை 3,26,699 ஆண்களும், 2,15,264 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.20) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,811 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் ஒரே நாளில் 5,516 பேருக்குக் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,338 பேரில், 5,516 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 64,74,656பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று மட்டும் 60 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,811 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,516 பேரில் 3,409 பேர் ஆண்களும், 2,107 பேர் பெண்களாவார்கள். இதுவரை 3,26,699 ஆண்களும், 2,15,264 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 174  ஆக உள்ளது. இன்று மட்டும் 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,81,273 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,703 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

மாவட்ட வாரியாக இன்று (செப்.20) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 36

செங்கல்பட்டு - 283

சென்னை - 996

கோவை - 568

கடலூர் - 297

தர்மபுரி - 136

திண்டுக்கல் - 82

ஈரோடு - 148

கள்ளக்குறிச்சி - 55

காஞ்சிபுரம் - 156

கன்னியாகுமரி - 133

கரூர் - 60

கிருஷ்ணகிரி - 112

மதுரை - 86

நாகை - 103

நாமக்கல் - 131

நீலகிரி - 130

பெரம்பலூர் -11

புதுக்கோட்டை - 101

ராமநாதபுரம் - 15

ராணிப்பேட்டை - 42

சேலம் - 291

சிவகங்கை - 61

தென்காசி - 87

தஞ்சை - 162

தேனி - 53

திருப்பத்தூர் - 68

திருவள்ளூர் - 207

திருவண்ணாமலை - 104

திருவாரூர் - 96

தூத்துக்குடி - 82

திருநெல்வேலி - 92

திருப்பூர் - 169

 திருச்சி - 92

வேலூர் - 95

விழுப்புரம் - 127

விருதுநகர் - 47

.