சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் இறப்பு
- சென்னையில் மீண்டும் 1,000-க்கும் அதிமகானோருக்கு கொரோனா தொற்று
- வட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகம்
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.55 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 67,720 மாதிரிகளில் 5,795 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 21வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,55,449 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 6,384 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,96,171 ஆக அதிகரித்துள்ளது. இன்று 116 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 17வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,123 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,795 நபர்களில் 1,186 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாவார்கள். இதுவரை சென்னையில் மட்டும் 2,517 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக இன்று கோவை மாவட்டத்தில் 394 பேருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 393 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 315 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்தது.