This Article is From Aug 25, 2018

'நான் பதவியை ராஜினாமா செய்வதாக வரும் தகவல் கற்பனையானது!'- ஓபிஎஸ் பேச்சு

சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

'நான் பதவியை ராஜினாமா செய்வதாக வரும் தகவல் கற்பனையானது!'- ஓபிஎஸ் பேச்சு

தமிழக துணை முதல்வரும் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ‘நான் பதவி விலகுவதாக தொடர்ந்து வரும் செய்திகள் வெறும் கற்பனை’ என்று கருத்து கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம், ‘அடுத்தடுத்து தமிழகத்தில் இடைத் தேர்தல் வர உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு நான் வகித்து வரும் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபடத் தயார்’ என்று பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி ஓ.பி.எஸ், ‘நான் ராஜினாமா செய்வதாக வரும் செய்திகள் கற்பனையானவை. அதை நம்ப வேண்டாம்’ என்றுள்ளார்.

மேலும் அவர், ‘திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் வரவுள்ள இடைத் தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெறும்’ என்றார்.

அவரிடம் தொடர்ந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று விஜயகாந்த் கூறியுள்ளது குறித்து கேட்டபோது, ‘அது அவர்களின் கொள்கை முடிவு. விஜயகாந்த், தான் எடுத்த முடிவில் ஸ்திரமாக இருக்க வேண்டும்’ என்று பதில் அளித்துள்ளார்.


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.