This Article is From May 22, 2020

46 லட்சம் மாஸ்க்; 12,690 மையங்கள்! 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் தமிழகம்

சுமார் 9.70 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளார்கள். இதற்காக மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்காக பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

46 லட்சம் மாஸ்க்; 12,690 மையங்கள்! 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் தமிழகம்

10-ம் வகுப்பு தேர்வு பணியில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 15-ம்தேதி முதல் தொடங்கவுள்ளன. இதையொட்டி, மாணவர்களுக்கு மாஸ்க் வழங்குதல், தேர்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. 

சமூக இடைவெளியுடன் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. 

இதற்காக 46.37 லட்சம் மாஸ்க்குகள் தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோருக்கு ஏதுவாக, இதுவரை இல்லாத அளவுக்கு 12,690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நோய்த்தடுப்பு பகுதிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். 

சுமார் 9.70 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளார்கள். இதற்காக மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்காக பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து தேர்வு மையங்களும் நாள் ஒன்றுக்கு 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். 

10-ம் வகுப்பு தேர்வு பணியில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.