This Article is From May 22, 2020

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி!

நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதி இல்லை.

Advertisement
தமிழ்நாடு Edited by

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி!

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

சென்னை மாநகராட்சி காவல் எல்லையத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் நாளை முதல் இயங்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டுமே பயணிக்கும் வகையில் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

தமிழ்நாட்டில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்று தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றின்‌ தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ எடுத்து வருகிறது.

Advertisement

பொதுமக்களின்‌ வாழ்வாதாரம்‌ மற்றும்‌ தொற்றின்‌ தன்மையை கருத்தில்‌ கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன்‌ தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

தற்போது, சென்னை மாநகராட்சி காவல்‌ எல்லையைத்‌ தவிர தமிழ்நாடு முழுவதும்‌ ஆட்டோ, சைக்கிள்‌ ரிக்ஷா ஆகிய வாகனங்கள்‌ ஒட்டுநர்‌ மற்றும்‌ ஒரு பயணி மட்டும்‌ பயணிக்கும்‌ வகையில்‌, நாளை (23.5.2020) முதல்‌ தினமும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டும்‌ இயக்க அனுமதிக்கப்படுகிறது.

நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ ஆட்டோ, சைக்கிள்‌ ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில்‌ வாழும்‌ ஆட்டோ/ரிக்ஷா ஒட்டுநர்களுக்கும்‌ இவ்வாகனங்களை ஒட்ட அனுமதி இல்லை.

Advertisement

பயணிகள்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ வாகனங்களில்‌ சானிட்டைசர்களை ஒட்டுநர்கள்‌ வைத்திருக்க வேண்டும்‌. ஒட்டுநர்களும்‌, பயணியர்களும்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்திருக்க வேண்டும்‌.

மேலும்‌, ஆட்டோ, சைக்கிள்‌ ரிக்ஷா ஆகியவற்றை தினமும்‌ மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்‌. ஒட்டுநா்கள்‌ அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும்‌, வாகனத்தில்‌ சுகாதாரத்தையும்‌ பேண வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement