This Article is From Aug 26, 2018

கேரளாவுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பியுள்ளது தமிழக அரசு!

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு, 1 லட்சம் லிட்டர் பாட்டில் தண்ணீரை அனுப்பியுள்ளது தமிழக அரசு

கேரளாவுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பியுள்ளது தமிழக அரசு!
Coimbatore:

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு, 1 லட்சம் லிட்டர் பாட்டில் தண்ணீரை அனுப்பியுள்ளது தமிழக அரசு. 1 லட்சம் லிட்டர் அளவு கொண்ட ‘அம்மா’ குடிநீர் பாட்டில்களை, தமிழக அரசு அனுப்பியுள்ளது.

இது குறித்து தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ’11 லாரிகளில் 1 லட்சம் லிட்டர் அளவிலான ‘அம்மா குடிநீர்’ பாட்டில்கள் கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் அரசி, பருப்பு வகைகள், மருந்துகள் மற்றும் பிற அடிப்படை பொருட்கள் 4 கோடி ரூபாய் அளவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள கேரளாவுக்கு தொடர்ந்து உதவி புரியும்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள மாநில நிவாரணத்துக்காக ஏற்கெனவே, 10 கோடி ரூபாய் அறிவித்திருந்தார். இதுமட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, 5 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை கொடுத்துள்ளது. அதுவும், நிவாரண உதவியுடன் அனுப்பிவைக்கப்பட உள்ளது’ என்று கூறியுள்ளார்.

.