This Article is From Dec 27, 2018

2019-ல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

மதுரை மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக அரசு அரசாணை மூலம் தெரிவித்துள்ளது.

2019-ல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

2019-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மதுரையில் மட்டும் 3 இடங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் உள்ள தகவலின்படி, அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம்தேதியும், பால மேட்டில் ஜனவரி 16-ம் தேதியும் நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17-ம்தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மதுரையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான தேதிகளை அறிவித்துள்ளது.
 

.