This Article is From Dec 01, 2018

முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிகிச்சைத் தொகை உயர்வு..!

தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்

முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிகிச்சைத் தொகை உயர்வு..!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1.58 கோடி தமிழக குடும்பங்கள் பயனடைந்து வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் நபர்கள் 5133.33 கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் பயன் பெறுபவர்களுக்கு ஏதுவாக தற்போது வழங்க்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து, 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

அதன்படி 1.12.2018-லிருந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் ஆண்டொன்றிக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

.