This Article is From Apr 27, 2020

அடுத்த ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு: தமிழக அரசு

2020 ஜன.1 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வும் நிறுத்திவைக்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பிற்காலத்தில் வழங்கப்படாது.

அடுத்த ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு: தமிழக அரசு

அடுத்த ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு: தமிழக அரசு

மத்திய அரசு அறிவித்ததைப் பின்பற்றி தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, அரசு ஊழியர்களுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில், தற்போது அகவிலைப்படி உயர்வையும் நிறுத்தி வைப்பதாக அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டு ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. 

2020 ஜன.1 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வும் நிறுத்திவைக்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பிற்காலத்தில் வழங்கப்படாது.

இந்த உத்தரவானது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், யுஜிசி மற்றும் அகில இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் அரச உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு டிப்ளமோ அமைப்புகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள், நூலகர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள், குழந்தை நலத்துறை அமைப்பு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம பஞ்சயத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.