கேரள மாநிலத்தில் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன.
தற்போது, கேரளாவில் பெய்து வந்த மிக கனமழை முடிவுக்கு வந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)