This Article is From Aug 01, 2018

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டு கிராமம் அமைக்க அரசு 108 கோடி ஒதுக்கீடு

மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் இதற்கான அடிக்கல்லை இன்று நாட்டினார்

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டு கிராமம் அமைக்க அரசு 108 கோடி ஒதுக்கீடு

மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான 175 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு கிராமம் ஒன்றை 108 கோடி ரூபாய் செலவில் உருவாக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இங்கு ஒரு நீச்சல் குளத்தையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டவுள்ளது. மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் இதற்கான அடிக்கல்லை இன்று நாட்டினார். உலகத்தரத்திலான இந்நீச்சல்குளம் ஐந்து கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்படும். தமிழகத்தில் வேளச்சேரியில் உள்ளதை அடுத்து இது இரண்டாவது உலகத் தரத்திலான நீச்சல்குளமாக அமையும். உயர்கல்விக்கான மொத்த பதிவு விகிதத்தில் (GER) தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக அமைச்சர் இந்நிகழ்வில் கூறினார். 2017-18இல் உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் மொத்த பதிவு விகதம் தேசிய அளவில் 25.8% ஆகவும் தமிழகத்தில் 48.6 ஆகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.