This Article is From Jun 04, 2020

இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை!

முன்னதாக நடிகர் பிரசன்னா மின்சாரக் கட்டணம் அதிக அளவில் வந்துள்ளதாக புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 60 நாட்களுக்கும் மேலாக முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. இக்காலக்ககட்டங்களில் வீடுகளுக்கு மின்சாரக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள கோரிக்கையில்,

“கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து  மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்.“

“மேலும், தமிழகம் முழுவதும் மின் கட்டணத்திற்கான  வரம்பை(Slab) நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும்,கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்தை வலியுறுத்துகிறேன்.“ என ட்விட்டர் வாயிலாக தனது கோரிக்கையை தெரிவித்திருந்தார்.

முன்னதாக நடிகர் பிரசன்னா மின்சாரக் கட்டணம் அதிக அளவில் வந்துள்ளதாக புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.