This Article is From Sep 08, 2018

எம்.ஆர்.பி. ரேட்டுக்கு மேல் விற்பனையா? புகார் தெரிவிக்க ஆப்.

பெட்ரோல்/டீசல் பங்குகளில் அளவு குறைவாக விற்பனை செய்தால் ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்

எம்.ஆர்.பி. ரேட்டுக்கு மேல் விற்பனையா? புகார் தெரிவிக்க ஆப்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், சாலையோர உணவகங்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்டுகள் ஆகியவற்றின் மீது, குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேல் (எம்.ஆர்.பி. ரேட்) விற்பனை செய்தல் அல்லது பெட்ரோல்/டீசல் பங்குகளில் அளவு குறைவாக விற்பனை செய்தல் அல்லது நியாய விலைக் கடைகளில் இதர நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களின் அளவினை குறைத்து விற்பனை செய்தல் போன்ற நுகர்வோர் நலனுக்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக புகார் செய்வதற்கு தொழிலாளர் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் TN-LMCTS (Tamil Nadu Legal Metrology Complaint Tracking System) என்ற கைப்பேசி செயலியை (ஆப்) Google Play Store மூலம் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக நுகர்வோர்கள் / பொதுமக்கள் புகார் அளித்து உரிய நிவாரணம் காணலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

.