தமிழகத்தில் நடக்க இருக்கும் உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியளித்துள்ளது தமிழக அரசு. இந்த போட்டிகள் நாளை தொடங்க உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காசோலை மூலமாக இந்த தொகையை தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கத் தலைவர் என்.ராமசந்திரனிடம் வழங்கினார் என தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு ஸ்க்வாஷ் சங்கம் நிதி உதவி கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த போட்டிகளில் பங்கேற்க 170 வீரர்கள் 28 நாடுகளில் இருந்து வந்து பங்கேற்கின்றனர். இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சவுதி அரேபியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாட்டில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், அந்த செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மேலக்கோட்டையுரில் உள்ள உடல் கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பல, புதிய வசதிகளை பயன்பாட்டுக்கு, வீடியோ கான்ஃபிரன்ஸிங் முலம் முதல்வர் திறந்து வைத்தார் என்று கூறப்பட்டிருந்தது.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)