This Article is From Apr 27, 2020

கெட்டுப்போன பால் பற்றி முதல்வரிடம் புகார்… 3 மணி நேரத்தில் ஆக்ஷன்- நன்றி தெரிவித்த எஸ்.வி.சேகர்!

தமிழக முதல்வர் அலுவலகத்திடமும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ட்விட்டர் மூலம் புகார் கூறியிருந்தார் எஸ்.வி.சேகர்.

Advertisement
தமிழ்நாடு Written by

ஆவின் பால் வாங்கியது கெட்டுப் போனதாக எஸ்.வி.சேகர் புகார்

Highlights

  • ட்விட்டர் மூலம் தமிழக முதல்வர் அலுவலகத்திடம் புகார் அளித்துள்ளார் சேகர்
  • அதேபோல துணை முதல்வர் ஓபிஎஸ் இடமும் புகார் அளித்துள்ளார்
  • புகார் அளித்த 3 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேகர் தகவல்

நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர், நேற்று தான் வாங்கி வந்த ஆவின் பால் பாக்கெட்டுகளில் சில கெட்டுவிட்டதாக ட்விட்டரில் தமிழக முதல்வர் அலுவலகத்திடமும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ட்விட்டர் மூலம் புகார் கூறியிருந்தார். அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தற்போது கூறியுள்ளார். 

நேற்று எஸ்.வி.சேகர், “இன்று காலை வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காச்சும் போது திரிந்துவிட்டது. வீட்டில் 90 வயது தாயார், 7 வயது, 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது,” என்று தமிழக முதல்வர்கள் அலுவலத்தையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் ட்விட்டர் மூலம் டேக் செய்திருந்தார். 

இதற்குத் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது சேகர், “நான் தங்களுக்குப் பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய டபுள் டோண்டு பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக் கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்,” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

Advertisement

Advertisement