This Article is From Jun 14, 2018

10 இந்திய நகரங்களிலும், 16 உலக நாடுகளிலும் தமிழ் மையங்கள் - தமிழக அரசு திட்டம்

டெல்லி, மும்பை, பெங்களூரு, போபால், போர்ட் ப்ளேர் உள்ளிட்ட 10 நகரங்களில், தமிழ் கற்பிக்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது

10 இந்திய நகரங்களிலும், 16 உலக நாடுகளிலும் தமிழ் மையங்கள் - தமிழக அரசு திட்டம்

ஹைலைட்ஸ்

  • டெல்லி, மும்பை, பெங்களூர் உள்பட 10 நகரங்களில் தமிழ் மையம்
  • அமெரிக்கா உள்பட 16 நாடுகளிலும் தமிழ் மையம்
  • வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் தமிழ் கற்க இந்த மையம் உதவும்

சென்னை: இந்தியாவில் 10 நகரங்களிலும், அமெரிக்கா உள்பட 16 நாடுகளிலும் தமிழ் மொழி மையங்கள் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக மொழி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மாஃபா பாணிடியராஜன் சட்டசபையில் தெரிவித்தார்.

டெல்லி, மும்பை, பெங்களூரு, போபால், போர்ட் ப்ளேர் உள்ளிட்ட 10 நகரங்களில், தமிழ் கற்பிக்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறினார். அதுபோல, அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்ரிக்கா, மியான்மர், மொரீசியஸ், ஃபிஜி, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்..

மேலே குறிப்பிடப்பட்ட நகரங்களிலும், நாடுகளிலும் கனிசமான அளவு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் எளிதில் தமிழ் கற்க, எழுத, படிக்க இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளது என்றார். இதற்கு தேவையான பாடத்திட்டங்களும் புத்தகங்களும் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

22 லட்சம் செலவில், மியான்மர் மற்றும் தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் நம் கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்களின் உச்சரிப்பை ஒழங்குபடுத்த தேவையான தமிழ் நெறிமுறைகளை வகுக்க 5 லட்சம் ரூபாய் செலவில், குழு அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். உதாரணமாக, சென்னை நகரில் உள்ள திருவல்லிக்கேணி என்ற பகுதியை ஆங்கிலத்தில் 'ட்ரிப்ளிகேன்' என அழைப்பதை சரிசெய்து, தமிழ் மொழியிலேயே பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.

அதைத் தொடர்ந்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கான மேலும் சில அறிவிப்புகளை தெரிவித்தார். முன்னதாக, சட்டசபை கூட்டதில் நடைப்பெற்ற வாதத்தின் போது,ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர், தமிழ் வளர்ச்சிக்காக தங்கள் ஆட்சியில் பங்களித்த பட்டியலை போட்டி போட்டு தெரிவித்து கொண்டனர்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.