Read in English
This Article is From Feb 11, 2019

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி: முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் 110 சிறப்பு விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

முதல்வர் அறிவிப்பால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Highlights

  • 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்
  • 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும் என அறிவிப்பு
  • முதல்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கீடு : முதல்வர்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 8-ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெறுகிறது. இன்று தொடங்கி மொத்தம் 3 நாட்களுக்கு இந்த தொடரின்போது தமிழக பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெறும் 

14-ம்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தின்போது பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் பதில் அளிக்கிறார். இந்த நிலையில் இன்றைய கூட்டத்தின்போது, 110 -விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 

அதில், '' வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மீனவ தொழிலாளர்கள்,  விவசாய தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும். இந்த சிறப்பு நிதியால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும்'' என்று கூறியுள்ளார். 
 

Advertisement
Advertisement