This Article is From Jul 21, 2020

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மனைவி, மகனுக்கு கொரோனா!

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று .

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மனைவி, மகனுக்கு கொரோனா!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மனைவி, மகனுக்கு கொரோனா!

தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், கடந்த வெள்ளிக்கிழமையன்று தமது மாமனார் நாகராஜன், மாமியார் ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, குடும்பத்தினருடன் தானும் பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். 

இதில் அவருடைய மனைவி கிருத்திகா மற்றும் மகன் அரவிந்துக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, குடும்பத்தினர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராதாகிருஷ்ணனும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.