This Article is From Aug 14, 2018

தமிழ்நாடு: ப்ளஸ்-1 துணைத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழ்நாடு மேனிலை முதலாமாண்டுத் துணைத் தேர்வு (TN HSC) முடிவுகளை dge.tn.nic.in என்ற முகவரியில் பார்த்துக்கொள்ளலாம்

தமிழ்நாடு: ப்ளஸ்-1 துணைத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு

பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

New Delhi:

மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான dge.tn.nic.in என்ற முகவரியில் பார்த்துக்கொள்ளலாம். ஜூன் – ஜூலை மாதங்களில் இச்சிறப்புத் துணைத்தேர்வுகள் நடத்தப்பெற்றன.

பத்தாம் வகுப்புக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 28 முதல் ஜூலை 6 வரை நடத்தப்பட்டன. +2 முழு ஆண்டுத் தேர்வு முடிவுகள் மே 17 இல் வெளியாகி இருந்தது.

பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகளை எப்படி அறிந்துகொள்வது?

j3qdgr8s
  1. dge.tn.nic என்ற தமிழக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகார்வபூர்வ இணையதளத்துக்குச் செல்க.
  2. “HSE Special Supplementary June 2018 First Year – Provisional Mark Sheet for Individuals” என்ற சுட்டியைக் க்ளிக் செய்யவும்.
  3. அடுத்த பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்யவும்.
  4. பதிவு செய்த விவரங்களை ‘submit’ க்ளிக் செய்து சமர்ப்பிக்கவும்.
  5. திரையில் தோன்றும் முடிவுகளை அறிந்துகொள்க.

குறிப்பு: இத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற தளத்தில் வெளியிடப்படவில்லை. Dge.tn.nic.in என்ற சரியான முகவரியில் முடிவுகளை அறிந்துகொள்ளவும்.

 

.