New Delhi:
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் இன்று மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு மதிப்பெண்ணை வெளியிட்டது. இதில் 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சிபெற்று மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த பதினோராம் ஆண்டு தேர்வில் மாணவிகள் அதிகம் தேர்ச்சிபெற்று மாணவர்களை பின் தள்ளியுள்ளனர். 94.6% மாணவிகளும், 87.4% மாணவிகளும் தேர்ச்சிபெற்றுள்ளனர்; இதில் முதல் மூன்று இடத்தைப்பிடித்துள்ள மாநிலம், ஈரோடு (97.30%), திருப்பூர் (96.40%) மற்றும் கோயம்புத்தூர் (96.20%).
தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்கிற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். சில வாரங்களுக்கு முன்பு தான் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவு வெளியில் வந்தது. அதில் 8லட்ச மாணவர்கள் தேர்வு எழுதி 91.1% மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். இதிலும் ஆண்களை விட பெண்கள் அதிக சதவீத வெற்றியை கண்டனர்.
Tamil Nadu HSC 1st Year Results: How To Check
உங்கள் தேர்வு முடிவுகளை காண:
ஸ்டெப் 1: தமிழ்நாட்டின் அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் முடிவு வலைத்தளத்திற்குச் செல்க. tnresults.nic.in
ஸ்டெப் 2: HSE (+1) முதல் வருடம் - தேர்வு முடிவுகளின் இணைப்பை கிளிக் செய்யவும்
ஸ்டெப் 3: உங்கள் பரீட்சை பதிவு விவரங்களை உள்ளிடவும்
ஸ்டெப் 4: உங்கள் முடிவுகளை சமர்ப்பித்த பின் காண்க.