2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட பொதுத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர்.
இதில், 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை,
tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.inஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.
ஆப்-ல் பார்க்க...
கூகுள் ப்ளே ஸ்டோரில் 'TN HSE Results' என சர்ச் செய்து ரிசல் வெளியாகும் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தவிர, தாங்கள் பியன்ற பள்ளிகளில் வழியாக பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.