Read in English
This Article is From Apr 19, 2019

+2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! முடிவுகளை அறிவது எப்படி?

Tamil Nadu HSE Result 2019: தமிழகத்தில் +2 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

Advertisement
தமிழ்நாடு Written by

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான இணையதளங்களான tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in. ஆகிய மூன்று தளங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த ஆண்டில் மே மாதம் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியாகிறது. 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட பொதுத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர்.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை,

tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

Advertisement

ஆப்-ல் பார்க்க...

கூகுள் ப்ளே ஸ்டோரில் 'TN HSE Results' என சர்ச் செய்து ரிசல் வெளியாகும் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

ப்ளஸ் டூ - முடிவுகளை அறிவது எப்படி?

1. மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.
2. HSE result என்ற பாக்ஸை க்ளிக் செய்யவும்.
3. ரோல் நம்பரை குறிப்பிட வேண்டும்.
4. சப்மிட் செய்ய வேண்டும்.
5. இதன்பின்னர் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

இது தவிர, தாங்கள் பியன்ற பள்ளிகளில் வழியாக பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

அதேபோல், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement

24ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை www.dge.tn.nic.in http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement