This Article is From Sep 12, 2018

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019: பலே பிரசாரத்தில் தமிழக அரசு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, தமிழக அரசு விளம்பரப் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019: பலே பிரசாரத்தில் தமிழக அரசு

சென்னையில் அடுத்த ஆண்டு 23-24 ஜனவரியில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னையில் நடந்த பிரசாரத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உடனிருந்தார்.

சென்ற வாரம் இதைப் போன்றதொரு சாலை வழி பிரசாரம் மும்பையில் நடந்தது.

இது குறித்து அமைச்சர் சம்பத் கூறுகையில், ‘தமிழகத்தில் இருக்கும் உற்பத்தித் திறனையும் தகுதியையும் காட்ட இந்த விளம்பர பிரசாரத்தை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் என்னென்ன வசதி இருக்கிறது என்பதை எடுத்துக் கூறுவோம். இந்தியாவிலேயே அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு 3,000 வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன’ என்று பேசினார்.

2015-ல் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்களின் முதல் மாநாடு நடைபெற்றது. அப்போது 6,500 நிறுவனங்களின் பிரதிநிகள் கலந்து கொண்டனர். அதில் 1600 பேர் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.