This Article is From Nov 03, 2018

தமிழகத்தின் பரவலான இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம்

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் பல இடங்களில் மிதமானது முதல் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழகத்தின் பரவலான இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று மாநிலத்தின் பரவலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம், ‘தென் இந்தியாவில் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் கடலோர மாவட்டங்களில் பருவமழையின் முதல் நாளிலேயே நல்ல மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி முதல், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதேபோல மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பொழியவும் வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் பல இடங்களில் மிதமானது முதல் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளது.

.