This Article is From Sep 11, 2018

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் இன்றும் அடுத்து வரும் 2 நாட்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் இன்றும் அடுத்து வரும் 2 நாட்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழக வட மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் ஆகியவற்றில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல தமிழக உள் மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் குறைவானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் மேலும், வளிமண்டலத்தில் கீழ் அடுக்கில் மேற்குத் திசை காற்றில் தெற்கு கர்நாடகம் முதல் கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலவுகிறது. மேல் அடுக்கில் கிழக்குத் திசை காற்றில் தெலங்கானா முதல் கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பொழியும் என்று கூறியுள்ளது.

.