"தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தேவாலாவில் அதிகபட்சமாக, 7 சென்டீ மீட்டர் மழை பெய்துள்ளது."
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேலடுக்கில் ஏற்பட்ட காற்றின் சங்கமத்தால் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே லேசான மழை பொழிவு இருக்கலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தேவாலாவில் அதிகபட்சமாக, 7 சென்டீ மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கோயம்புத்தூரின் வால்பாறை, நீலகிரியின் ஜி.பஜார் மற்றும் நடுவட்டம் பகுதிகளில் தலா 6 சென்டீ மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.