"கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 13 சென்டீ மீட்டர் மழை பெய்துள்ளது."
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமத்தால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து விரிவான தகவலைத் தெரிவிக்க இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வளி மண்டல மேலடுக்கு சுழற்சியில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமத்தால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்கு மழை தொடரும்.
தர்மபுரி, திருவண்ணாமலை, நாகை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 13 சென்டீ மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையானது சென்னையில் இயல்பைவிட 5 சதவிகிதம் அதிகம் பொழிவைக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் 18 சென்டீ மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவுதான்.” என்று தகவல் தெரிவித்துள்ளார்.