This Article is From Oct 05, 2019

“பல்டி அடிச்சாலும், தோப்புக்கரணம் போட்டாலும்…”- Kamal-ஐ வறுத்தெடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

“தமிழக அரசை தேர்ந்தெடுப்பது Kamal கிடையாது. மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்"- Jayakumar

“பல்டி அடிச்சாலும், தோப்புக்கரணம் போட்டாலும்…”- Kamal-ஐ வறுத்தெடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

Kamal, தனது அரசியல் பிரவேசத்தை அறிவிதத்தில் இருந்து அதிமுக-வுக்கு எதிராக தொடர்ந்து காட்டமாக கருத்து தெரிவித்து வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan), தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கருத்து தெரிவித்துள்ளார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் (Jayakumar). 

செய்தியாளர்கள் மத்தியில் ஜெயக்குமார் பேசுகையில், நிருபர் ஒருவர், “மக்களுக்கு, சமூகத்துக்குத் தேவையில்லாத அரசு, அதிமுக அரசு என்று கமல் சொல்லியிருப்பது குறித்து…”, என்று கேள்வியெழுப்பினார், அதற்கு ஜெயக்குமார், “தமிழக அரசை தேர்ந்தெடுப்பது கமல் கிடையாது. மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதிக நாட்கள் ஆண்ட கட்சி எது என்று தெரியும். இனி அதிக நாட்கள் ஆளப் போகின்ற கட்சியும் அதிமுக-வாகத்தான் இருக்கும். 

எனவே அவர் சொல்வதை நாங்கள் பொருட்படுத்துவதே கிடையாது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் பலம் என்ன என்பது தெரிந்துவிட்டது. அவருக்கு வெறும் 6 சதவிகிதம் வாக்குகள்தான் கிடைத்தன. அதுதான் அவரின் உச்சம். எனவே, அரசியல் களத்தில் இருக்க வேண்டுமென்றால், அதிமுக அரசை விமர்சித்தால்தான் முடியும் என்ற நோக்கில் அவர் பேசி வருகிறார். அவர் என்னதான் தோப்புக்கரணம் போட்டாலும், குட்டிக்கரணம் போட்டாலும், பல்டி அடித்தாலும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது” என்று ஆவேசமாக பேசினார். 

கமல், தனது அரசியல் பிரவேசத்தை அறிவிதத்தில் இருந்து அதிமுக-வுக்கு எதிராக தொடர்ந்து காட்டமாக கருத்து தெரிவித்து வருகிறார். சமீபமாக சுபஸ்ரீ மரண விவகாரத்திலும் அவர் தமிழக அரசை சரமாரி கேள்விகளால் துளைத்தெடுத்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் ஜெயக்குமார் கமலின் வாதங்களுக்கு எதிர்வாதம் வைத்துள்ளார். 


 

.