This Article is From Nov 19, 2019

“அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா..?”- தமிழக அமைச்சர் திடீர் ஆதரவு!

“ரஜினி (Rajini), கமல் (Kamal), விஜய் (Vijay) ஆகியோர்தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா?"

Advertisement
தமிழ்நாடு Written by

"மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்"

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajndra Balaji), நடிகர் அஜித்திற்கு (Ajith) ஆதரவாக கருத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது. 

இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில், “ரஜினி (Rajini), கமல் (Kamal), விஜய் (Vijay) ஆகியோர்தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா? மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்,” என்னும் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார். 

கமல், மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியை ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், ரஜினிகாந்தும் விரைவில் தீவிர அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் தன் பங்கிற்குத் தொடர்ந்து ஜனரஞ்சக கருத்துகளையும் திரைப்படங்களிலும் சொல்லியும் நடித்தும் வருகிறார். குறிப்பாக அவர் தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக-வின் கொள்கைகளை விமர்சனம் செய்வது போல பரபர கருத்துகளைத் திரைப்படங்கள் வாயிலாக தெரிவித்து வருகிறார். இதனால் அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் விஜய்க்கு எதிராக நேரடியாகவே செயலாற்றத் தொடங்கியுள்ளனர். 

அதேபோல சமீபத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தன் வீட்டு சுவற்றுக்குப் பின்னால் இருந்து மட்டும்தான் அரசியல் கருத்தைக் கூறுவார் ரஜினி. அவர் இன்னும் களத்துக்கே வரவில்லை. ஊடகங்கள்தான் தேவையில்லாமல் அவருக்கு வெளிச்சம் கொடுத்து வருகின்றன. சிவாஜி கணேசன், அரசியலுக்கு வந்தபோது என்ன நிலைமை ஏற்பட்டதோ, அதே நிலைமைதான் ரஜினிக்கும் கமலுக்கும் ஏற்படும்,” என்று கறாரான விமர்சனங்களை முன்வைத்தார். இப்படி அதிமுக தரப்பு, ரஜினி, கமல் மற்றும் விஜய்க்கு எதிராக கருத்து கூறி வரும் நிலையில், அஜித்தை மட்டும் தூக்கிப் பிடித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement