This Article is From Dec 26, 2018

கஜா புயல் நிவாரண நிதி கோரி தமிழக அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனிடம் மனு!

தமிழகம் கோரியிருக்கும் கஜா புயல் நிவாரண நிதியில் ரூ.350 கோடியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது

கஜா புயல் நிவாரண நிதி கோரி தமிழக அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனிடம் மனு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க கோரியும், கஜா புயல் நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கோரிக்கை மனுவை உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் டெல்லியில் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினர்.

பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தவர்கள் கூறியதாவது,

தமிழகத்திற்கு வரவேண்டிய 2017 - 18ஆம் ஆண்டிற்கான ஊக்கத்தொகை ரூ.560 கோடியும், தமிழக உள்ளாட்சி அமைப்புக்கான 2018 - 19க்கான ரூ.3216 கோடியும் விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு கோரிக்கை மனுக்களை அளித்ததாக தெரிவித்தனர்.

தமிழகம் கோரியிருக்கும் கஜா புயல் நிவாரண நிதியில் ரூ.350 கோடியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது, மீதமுள்ள தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நரேந்திர சிங் தோமரை சந்தித்து அடுத்தடுத்த நாட்களில் முறையிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம் பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையா என கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்தவர்கள், பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என்றனர்.


 

.