காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்தியுள்ளது.
சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்து பேசிய திமுக துணை தலைவர் துரைமுருகன், கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. அதனால், தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, “காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டை குறித்து தெரிந்து கொண்ட பின், தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெறுவது குறித்து ஆலோசிக்கலாம்” என்றார்
துரைமுருகனின் கருத்துக்கு ஆதரவு அளித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், கர்நாடக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க உள்ளதாக கூறியிருக்கிறார். அதனால், தமிழ்நாட்டில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அனைத்து கட்சி கூட்டத்தின் ஆதரவை தொடர்ந்து, கடந்த ஜூன் 30 ஆம் தேதி, காவிரி நீர் மேலான்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
“இந்த பிரச்சனையை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதுவும் இல்லை. காலம் கடத்துவதற்காக கர்நாடக மாநிலம் நாடகம் நடத்துகிறது” என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, காவிரி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற வேண்டும் என்பது “நல்ல முடிவு” என்றார்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)