This Article is From Dec 07, 2018

மழைக்கு வாய்ப்பிருக்கிறதா..? - வானிலை மையம் என்ன சொல்கிறது

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பிருக்கிறதா..? - வானிலை மையம் என்ன சொல்கிறது

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் தெரிவிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. அதிகபட்சமாக, திருவண்ணாமலை சாத்தூர் அணையிலும், சத்யமங்கலத்திலும் 2 சென்டி மீட்டர் மழை பெய்தது.

தற்போது வங்கக் கடலில் எந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் உருவாகததால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மேக மூட்டமான சூழ்நிலை நிலவும். மழை பெய்ய வாய்ப்பில்லை' என்று தெரிவித்துள்ளது.

வரும் 15 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

.