TN Weather Update - தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்பத்தூர் மாவட்டத்தின் சூளூரில் 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
TN Rain Update- அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அந்தமான் பகுதியில் உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 அல்லது 3 தினங்களில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு, தென் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான முதல் மிதமான மழை, ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்பத்தூர் மாவட்டத்தின் சூளூரில் 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, 4 மற்றும் 5 தேதிகளில் அந்தமான் கடற்பகுதிக்கும். 6,7 மற்றும் 8 தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று தகவல் தெரிவித்துள்ளார்.