TN Rain Update - “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக..."
Tamilnadu Weather Forecast - தமிழக அளவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை (Rain) தொடரும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக கோயம்புத்தூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூரில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடியின் காயல்ப்பட்டினத்தில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.