This Article is From Jun 22, 2020

TN Rains: தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு!!

அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

TN Rains: தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு!!

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது
  • வெப்பச் சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது
  • கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையத்தின் தகவல்படி, ‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்,

திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையின் வால்பாறை மற்றும் சோலையார் பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.