சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது
- தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
- கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் எனத் தகவல்
தமிழகத்தில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் அறிவிக்கையில், ‘தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலத்தின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும்,
சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சியின் கல்லக்குடியிலும் திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணியிலும் தலா 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.