This Article is From Jun 23, 2020

தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

நாளை மற்றும் நாளை மறுநாள் தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையைப் பொறுத்தவரை வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும்.

Highlights

  • மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது
  • மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது
  • தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் தென் மேற்குப் பருவமழை ஆரம்பித்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டலம், ‘அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Advertisement

நாளை மற்றும் நாளை மறுநாள் தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement