This Article is From Mar 10, 2020

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான போட்டி - அதிமுக பட்டியலில் இடம்பெற்ற ஜி.கே.வாசன்!

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு இடங்களுக்கு கே.பி.முனுசாமி மற்றும் மு.தம்பிதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்"

Advertisement
தமிழ்நாடு Written by

"26.03.2020 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில்"

Highlights

  • ஜி.கே.வாசனும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்
  • ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது
  • நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் வாசன்

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இடங்களில், காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையின்படி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 26.03.2020 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு இடங்களுக்கு கே.பி.முனுசாமி மற்றும் மு.தம்பிதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

மற்றுமுள்ள ஒரு இடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடத்தில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement