This Article is From Apr 26, 2019

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த தேதியில் உறுதியாக வெளியிடப்படும்

இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற தளத்தில் பார்க்கலாம்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த தேதியில் உறுதியாக வெளியிடப்படும்

இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பிற்கான முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 29 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களில் பார்க்கலாம். இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பிற்கான முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்வதோடு தங்களுடைய மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு பதிவெண் மற்றும் பிறந்தநாள் அவசியம். 

தேர்வு முடிவுகளை சில தனியார் இணையதளங்களிலும் பார்க்கலாம். 

manabadi.com, indiaresults.com, மற்றும examresults.net ஆகிய தளங்களிலும் பார்க்கலாம்.

2018 ஆம் ஆண்டி 10 ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 94.5% மாக இருந்தது. அதில் மாணவிகள் 96.4 சதவீதமாகவும் மாணவர்கள் 92.5 சதவீதமாகவும் இருந்து வந்தது. 

தமிழ்நாடு கல்வி ஆணையம் பிளஸ் 2 முடிவுகளை வெளியிட்டது. 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்ச்சி விகிதம் 91.3 சதவீதமாக இருந்தது. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.64 சதவீதமாகவும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.57 சதவீதமாகவும் இருந்தது.  பிளஸ் 1 முடிவுகள் மே 8 அன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற தளத்தில் பார்க்கலாம்.

.