அரசு கொடுத்த தகவல்படி, 3,79,733 பேர், டெட், இரண்டாம் தாள் தேர்வை எழுதியுள்ளனர்.
New Delhi: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB), டி.என் டெட் (TN TET) 2019, தாள் இரண்டுக்கான ஸ்கோர் கார்டை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 22, 2019 அன்று டெட் 2019, தாள் ஒன்றுக்கான ஸ்கோர் கார்டு வெளியிடப்பட்டிருந்தது. முன்னரே தமிழக டெட் தாள் 1, தாள் 2-க்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. டெட், இரண்டாம் தாளுக்கான ஸ்கோர் கார்டை, டி.ஆர்.பி தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு கொடுத்த தகவல்படி, 3,79,733 பேர், டெட், இரண்டாம் தாள் தேர்வை எழுதியுள்ளனர்.
டெட் மதிப்பெண்களை தரவிறக்கம் செய்ய, தேர்வு எழுதியவர்கள், அவர்களது யூசர் ஐடி மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
TN TET முடிவுகள் 2019: எப்படி ஸ்கோர் கார்டை தரவிறக்கம் செய்வது?
ஸ்டெப் 1: தமிழக டி.ஆர்.பி-யின் அதிகாரபூர்வ தளத்துக்குச் செல்லவும்: http://trb.tn.nic.in/
ஸ்டெப் 2: டெட், இரண்டாம் தாளுக்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: இணையப் பக்கத்தின் கீழே ஸ்கரால் செய்து, ஸ்கோர் கார்டு தரவிறக்கம் செய்ய கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்களது லாக்-இன் ஐடி மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
ஸ்டெப் 5: லாக்-இன் செய்து உங்களது டெட், இரண்டாம் தாளுக்கான ஸ்கோர் கார்டை தரவிரக்கம் செய்து கொள்ளவும்.
நேரடியாக தரவிறக்கம் செய்வதற்கான லிங்க்: https://trbtet.onlineregistrationform.org/TNTRB/LoginAction_input.action
தேர்வு எழுதியவர்கள், அவர்களது யூசர் ஐடி-யை மறந்துவிட்டிருந்தால், ‘ஃபர்காட் யூசர் ஐடி' என்றிருக்கும் ஆப்ஷனைப் பயன்படுத்தி, லாக்-இன் ஐடி-யை மீட்டெடுக்கலாம். லாக்-இன் ஐடி, எந்த மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதற்கு வந்துவிடும்.