Heavy Rain Alert for TN - "சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் இருக்கும். ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது"
Heavy Rain Alert for TN - தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை (Rain) இருக்கும் என்று வானிலை மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “தமிழகம் மற்றும் புதுவை வெப்பச் சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமாக மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் இருக்கும். ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தின் புவனகிரியில் அதிகபட்சமாக, 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில், 28 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமான அளவு 31 சென்டி மீட்டர். இது வழக்கத்தைவிட 9 விழுக்காடு குறைவு. சென்னையைப் பொறுத்தவரை, 30 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமாக பெய்ய வேண்டிய அளவு 51 சென்டி மீட்டர் ஆகும். வழக்கத்தைவிட இந்த ஆண்டு சென்னையில் 41 விழுக்காடு மழை குறைவாக பெய்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.