This Article is From Aug 29, 2019

TRB: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

TN TRB: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

TRB: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

TRB: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

New Delhi:

அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் 2,340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடித் தேர்வு முறையில் நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

2018-19ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர்கள் பதவிக்கு தகுதியானவர்கள், நேரடி தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

இதற்கு செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க செப்டம்பர் 24 கடைசி நாளாகும்.

TN TRB உதவி பேராசிரியர் நேரடித் தேர்வு 2019: முக்கிய தேதிகள்

அறவிப்பு வெளியான தேதி: ஆகஸ்ட் 28, 2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: செப்டம்பர் 4, 2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: செப்டம்பர் 24, 2019

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடித் தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜூலை 1, 2019 ஆம் தேதியின் படி 57 வயதை நிறைவு செய்திருக்ககூடாது. 

TN TRB உதவி பேராசிரியர் நேரடித் தேர்வு 2019: விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் "விண்ணப்பிப்பது எப்படி" என்ற பகுதியை கவனமாக படிக்க வேண்டும். 

தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த வகையில் விண்ணப்பிப்பதும் ஏற்றுக்கொள்ளப்படாது. 

இதற்கு பயன்பாட்டில் உள்ள தேர்வரின் இமெயில் ஐடி, மற்றும் மொபலை எண் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். மேலும், எதிர்காலங்களில் தொடர்பு கொள்ளும் வகையில், இமெயில் ஐடியை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.  

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே, சான்றிதழ்களின் சரியான விவரங்களை அளிக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது இந்த சன்றிதழ் விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கப்படும். 

.