Read in English
This Article is From Oct 08, 2019

TNTRB Recruitment: 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு!

TNTRB Recruitment: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) வெளியிட்டுள்ளது.

Advertisement
Jobs Edited by

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணிப்பத்தை தொடங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்

New Delhi:

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர்களுக்கான 2331 காலியிடங்களை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) அறிவித்துள்ளது. 

இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதமே ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் விண்ணப்பிக்கும் செயல்முறை ரத்து செய்யப்பட்டது. இந்த தாமதத்திற்கு சில தொழில்நுட்ப காரணங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கோள் காட்டியது. 

இந்நிலையில், தற்போது மீண்டும் காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க அக்.30 கடைசி தேதியாகும். 

முதல் அறிவிப்பில், 2340 காலியிடங்களை அறிவித்திருந்த ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த முறை 9 பணியிட எண்ணிக்கையை குறைத்து அறிவித்துள்ளது. 

Advertisement

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் செயல்முறைக்கான வேட்பாளர்களை தகுதி அடிப்படையில் தேர்வு வாரியம் பட்டியலிடுகிறது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் 1:3 என்ற விகிதத்தில் வேட்பாளர்களை பட்டியலிடும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கான தேதி பின்னர் வாரியத்தால் அறிவிக்கப்படும்.

இந்த காலிப் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. கற்பித்தல் அனுபவம், கல்வித் தகுதி மற்றும் நேர்காணலில் செயல்திறன் உள்ளிட்ட மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். 

Advertisement

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, NET / SLET / SET / SLST / CSIR / JRF போன்ற ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும், அதிகபட்ச கல்வித்தகுதியாக, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் அத்துடன் பிஎச்.டி (Ph.D) பட்டம் பெற்றவராக இருந்தாலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில், http://trb.tn.nic.in/- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். 

Advertisement

Click here for more Jobs News

Advertisement