விண்ணப்பிப்போர் தமிழை பாடமாகக் கொண்டு 10/12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
New Delhi: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்டவை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் கணினி முறைப்படி நடைபெறும்.
விரிவுரையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் Engineering / Technology / Architecture பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதே விண்ணப்பதாரர் முதுநிலைப் பட்டப்படிப்பு பெற்றிருப்பார் என்றால், அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்போர் தமிழை பாடமாகக் கொண்டு 10/12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தகுதி இல்லாவிட்டால் விண்ணப்பதாரர் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிக்கு சேர்ந்த நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் டி.என்.பி.எஸ்.சி.நடத்தும் தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கணினி முறையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.