This Article is From Sep 28, 2018

நிலுவையில் உள்ள தொகையை நிதி கமிஷன் விரைந்து வழங்க தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி வழங்குமாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடிதம் எழுதியுள்ளார்

நிலுவையில் உள்ள தொகையை நிதி கமிஷன் விரைந்து வழங்க தமிழக அரசு வலியுறுத்தல்

உள்ளாட்சிக்கான தேவைகள், அடிப்படை தேவைகள் நிறைவேற்றம் உள்ளிட்டவைகளுக்காக நிலுவையில் இருக்கும் தொகை விரைந்து வழங்க வேண்டும் என்று 14-வது நிதி கமிஷனை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ 2017-18-ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 194.78 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அத்துடன் 2018-19-ம் ஆண்டுக்கான நகர்ப்புற நிர்வாக அடிப்படை செலவு நிதி ரூ. 876.94-யை வழங்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர முடியும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான அடிப்படை செலவுத் தொகை ரூ. 758.06-யையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இதன்மூலம் கிராமப்புற மக்களின் தேவைகள் நிறைவேறும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.