This Article is From Oct 05, 2019

TN Weather Update: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

TN Weather Update: "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது”

Advertisement
தமிழ்நாடு Written by

TN Weather Update: தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிவடைந்த பின்னரும், ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் வானிலை நிலவரம் குறித்து தகவல் தெரிவித்துள்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம்.

வானிலை மையம் அளித்த தகவலின்படி, “அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும் ஏனைய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

Advertisement

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இந்த ஆண்டு கனிசமான மழை பெய்துல்லதால், நிலத்தடி நீர் மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் கூறியுள்ளது. 


 

Advertisement
Advertisement