This Article is From Nov 15, 2019

TNFUSRC நடத்திய வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தாங்கு திறன் சோதனையான Endurance நவம்பர் 26-ம்தேதி நடத்தப்படுகிறது. 

TNFUSRC நடத்திய வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு!
New Delhi:

.

தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர்கள் தேர்வுக் கமிட்டியான TNFUSRC நடத்திய வனக்காப்பாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் TNFUSRC -ன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

பட்டியலில் இடம்பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவற்றுக்கு அழைக்கப்படுவார்கள். 1:3 என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர்கள் தேர்வு கமிட்டி நடத்திய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த அக்டோபர்  4 -ல் தொடங்கி அக்டோபர் 6-ம்தேதி வரையில் நடத்தப்பட்டது. இதன்பின்னர் விடைத்தாள் கடந்த அக்டோபர் 25-மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்தம் 18 மாவட்டங்களுக்கு 465 வனக்காப்பாளர்கள் பணியிடங்கள், 99 மலைவாழ் இளைஞர்களுக்கான வனக்காப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

முடிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்க்குகளை க்ளிக் செய்யவும்.
 

TNFUSRC Forest Watcher Result For 465 Posts

TNFUSRC Forest Watcher Result For 99 Posts


சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தாங்கு திறன் சோதனையான Endurance நவம்பர் 26-ம்தேதி நடத்தப்படுகிறது. 

Click here for more Jobs News

.