This Article is From Oct 04, 2018

தமிழகத்தில் உதவி அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள உதவி அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உதவி அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
New Delhi:

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 46 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு அரசுத் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  வெளியிட்டுள்ளது. 


இந்த பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். 


இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31-ம் தேதிதான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணைய தளமான tnpsc.gov.in - ல் சமர்ப்பிக்கும்படி விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


விண்ணப்பதாரர்கள் பி.எல். பட்டப்படிப்பு சான்றிதழ், பார் கவுன்சில் உறுப்பினர், கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இங்கு விதிக்கப்பட்டுள்ளன. 

.